fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் 8 நாடுகளின் தூதர்களை ஒன்றிணைத்த புட்சல் போட்டி

சென்னையில் 8 நாடுகளின் தூதர்களை ஒன்றிணைத்த புட்சல் போட்டி

‘தி அஸ்காட் லிமிடெட்’, அதன் மதிப்புமிக்க ஃபுட்சல் போட்டியான டிப்ளமேடிக் பிரீமியர் லீக்கின் ஏழாவது பதிப்பை சென்னையில் நடத்தியது.

யுனைடெட் நேஷன்ஸ் ஹை கமிஷனர் ஃபார் ரெஃப்யுஜீஸ் மற்றும் கான்சலர் கார்ப்ஸ் டிப்ளமேடிக் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட டி.பி.எல் சென்னையின் டிப்ளமேடிக் சமூகத்தை ஆண்டுதோறும் ஒன்றிணைத்து அகதிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.

தி அஸ்காட் லிமிடெட்டின் பொது மேலாளர் ஹோஷாங் கரிவாலா கூறுகையில், “சென்னையின் தூதரகப் படைகளை விளையாட்டு மூலம் ஒன்றி ணைப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள அகதிகளுக்கு ஒத்துழைப்புக்கான தளத்தை உருவாக்கி, முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்“ என்றார்.

அஸ்காட் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் அனூப் குமார் கூறுகையில், “டி.பி.எல் என்பது ஒரு விளையாட்டு மூலம் பல நாட்டு தூதர்களை ஒன்றிணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க தளமாகும். அதே நேரத்தில், உலகளாவிய அகதிகள் நேரிடும் நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்றார்.

கோப்பையை வெளியிடும் விழாவில், தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் ஷாலினி அஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜெர்மனி, கொரியா, ஜப்பான், மலேசியா, இத்தாலி, ரஷ்யா, தாய்லாந்து, ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்களைச் சேர்ந்த அணிகளுடன் சி.சி.டி, கைடன்ஸ் தமிழ்நாடு மற்றும் யு.என்.ஹெச்.சி.ஆரை சேர்ந்து மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றன.

படிக்க வேண்டும்

spot_img