திண்டுக்கல் முருகபவனம் அருகில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மற்றும் பூமாலை வணிக வளாகம் அருகில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மாவட்ட மருந்து கிடங்கு ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் சேமிப்புக் கிடங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய் வின்போது, சேமிப்பு கிடங்கில் உணவு தானியம் பராமரிப்பு நடை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கு பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். தொழிலாளர் நல வாரியத்தில் அவர்கள் பெயர் பதிவு செய்துள்ளனரா, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து, விடு பட்டவர்களை உடனடியாக நலவாரியத்தில் உறுப்பினராகவும், மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறவும் பதிவு செய்யும்படி அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் திண்டுக்கல் மாவட்ட மருந்து கிடங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருந்து கள் இருப்பு, பராமரிப்பு முறைகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் சார்பில் திண்டுக்கல் சேமிப்புக் கிடங்கு மொத்தம் 7 கிடங்குகளுடன் 14,100 மெ.டன் கொள்ளளவு கொண்டு செயல் பட்டு வருகிறது. இதில் இந்திய உணவுக் கழகம் 12,500 மெ.டன் அளவில் வருடாந்திர உத்தரவாத அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது. மேலும், இங்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் 1200 மெ.டன் அளவில் செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் சேமிப்புக் கிடங்கில், இந்திய உணவுக்கழகம், பொது விநியோகத் திட்டத்திற்கான அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை இருப்பு வைத்துள்ளது. இங்கிருந்து திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக பொது விநியோக திட்டத்திற்கு அரிசி மற்றும் கோதுமை அனுப்பி வைக்கப்படுகிறது.
திண்டுக்கல் சேமிப்பு கிடங்கிற்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிருந்து அரிசியும், பஞ்சாப், அரியானா, சட் டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கோதுமையும் ரயில்வே வேன்கள் மூலமாக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து மாதத்திற்கு சுமார் 10,000 மெ.டன் அளவுக்கு அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் திண்டுக்கல் மாவட்ட பொது விநியோக திட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இங்கு விஞ்ஞான முறையில் தானியங்கள் சேமித்து வைக்கப் பட்டு, புழு பூச்சிகள் தாக்காத வகையில் பூச்சித் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், திண்டுக்கல் மாவட்ட மருந்து கிடங்கு மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், ஐசிடிஎஸ் மற்றும் கால்நடை மருந்தகங்கள் என ஆக மொத்தம் 120 நிலையங்களுக்கு 351 மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மதர் பேபி கிட், மக்களை தேடி மருத்துவம், தேசிய குடற்புழு நீக்கத் திட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024-2025 வருடத்திற்கு மருந்துகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட வகையில் ரூ.33.34 கோடி மதிப்பீட்டிலான மருந்துகள் 120 நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு திண்டுக்கல் மண்டல மேலாளர் அருண்ஜெகன் நாராயணன், சேமிப்புக் கிடங்கு மேலாளர் நா.இரகுராமன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.உதயகுமார், திண்டுக்கல் மாவட்ட மருந்து கிடங்கு பொறுப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



