தமிழக அரசின் சார் பாக மாபெரும் தமிழ்க் கனவு என்னும் நிகழ்வு “தொன்மை மறவேல்” என்னும் தலைப்பில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சொற்பொழி வாளர் பாரதி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 1500-க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். வினாக் கள் எழுப்பும் நிகழ்வில் சிறந்த முறையில் பங்கேற்றதற்காக பி.பி.ஏ (சி.ஏ) இரண்டாம் ஆண்டு படிக்கும் தேஜா ஸ்ரீக்கு பாராட்டுச் சான் றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வினை தமிழ்த்துறைக் கலையியல் புலத்தின் தலைவர் மு.வினோதினி ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.



