fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்-லூரியில் தேசிய கைத்தறி தின விழா

சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்-லூரியில் தேசிய கைத்தறி தின விழா

சர்தார் வல்லபாய் படேல் சர்வ தேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு கல்லூரி அரங்கத்தில் தொடங்கியது. இக்கல்லூரியின் இயக்குநர் டாக்டர் பி. அல்லி ராணி கைத்தறியின் பாரம்பரியம் குறித்து உரையாற்றினார்.

மாணவர்கள் தங்கள் ஆடை செலவில் குறைந்தது 10% கைத்தறி ஆடைகளுக்காக செலவிட வேண்டும் என்றும், கைத்தறி பொருட்களின் அழகு மற்றும் நிலைத்தன்மையை உலகம் அங்கீக ரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார். முக்கிய விருந்தினராக புனேயைச் சேர்ந்த அனகா கைசாஸ் கலந்து கொண்டு, திரைப்படத் தயாரிப்பாளராக இருந்து கைத்தறி தொழிலில் இணைந்த தனது பயணத்தைப் பகிர்ந்தார். கௌரவ விருந்தினராக NHDC நிறுவனத்தின் ரத்தினவேல் கலந்து கொண்டு, கைத்தறி பொருட்கள் மதிப்புடன் விற்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக பிரமோத் குமார் ஜஜாரியா (Shristi Cotspin) கலந்து கொண்டு கைத்தறித் தொழிலைப் பாதுகாப்பதன் அவசி யத்தை வலியுறுத்தினார்.
நிகழ்வின் இறுதியில், மாணவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறிப் புடவைகளை அணிந்து ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்தினர். இது நம் நாட்டின் பண்பாட்டு பல் வகைத்தன்மையையும் நெச வாளர்களின் திறமையையும் எடுத் துக்காட்டியது.
வெளியே NHDC மற்றும் காதி நெசவாளர்கள் தங்கள் கைத்தறி தயாரிப்புகளை காட்சிக்கு வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img