fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 14வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 14வது பட்டமளிப்பு விழா

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் 14வது பட்டமளிப்பு விழாவை ஈச்சனாரியில் உள்ள மஹாலில் கொண்டாடியது. சுமார் 284 பட்டதாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், API-PRF இயக்குநர் டாக்டர் முருகநாதன் ஆகிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பி. பெரியசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார். இயக்குநர்கள் டாக்டர். எம். குந்தவி தேவி, டாக்டர். ஆர். செந்தில் குமார், டாக்டர். பி. பால முருகன், டாக்டர். பி. உமாதேவி, டாக்டர். பி. சுசரிதா டீன் மற்றும் அபிராமி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் சிறப்பு புரவலர்களாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து டீன் அனைத்து பிரமுகர்கள், அழைப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளை வரவேற்றார்.

முதல்வர் தலைவர் மற்றும் விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கி அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பி.பெரியசாமி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்து, பட்ட தாரிகளை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக வடிவமைப்பதில் கற்றல் ஒரு தொடர்ச்சியான செயல் முறை என்றார்.

தொடர்ந்து, ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன், வெற்றியடைய குழுவாக செயல்பட வேண்டும் என்ற தனது வாழ்க்கைக் கருத்தை பகிர்ந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர், டாக்டர். ஏ.முருகநாதன், கல்வி முறை மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது, புதுமை மற்றும் வேலைவாய்ப்பு அத்துடன் தொழில் முனைவோர் நோக்குடையதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மேடையில் உள்ள அனைத்து பிரமுகர்களாலும் பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img