தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங் காற்றும் நான்கு பெரும் கண்காட்சிகள் வேர்மார்ட் (கிடங்கு மற்றும் பொருள் கையாளல் கண்காட்சி), டோபேக் (மொத்தப் பாக்கேஜிங் கண்காட்சி), டோபிளாஸ்ட் (மொத்த பிளாஸ்டிக் கண்காட்சி), ஆட்டோரோபர்ட் (ஆட் டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் கண்காட்சி) கண்காட்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகம் எ மற்றும் பி அரங்குகளில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சிகள் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை நடை பெறுகிறது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாள ராக சிஐஏ தலைவர் தேவகுமார் நாகராஜன், எம்எஸ்எம்இ (டிஎப்ஒ) உதவி இயக்குநர் சி.பி. ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி குறித்து மெட்ராஸ் டச் ஈவன்ஸ் மற்றும் ட்ரேட் பேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் பேசுகையில், “இந்த 4 கண்காட்சிக ளின் பிரதான குறிக் கோள் தொழில்துறை வளர்ச்சிக் கும், புதுமைக்கும், வணிக இணைப்புகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும்“ என்றார்.
தொழில்துறை மேம் பட உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களை முக்கிய துறைகளின் இறுதி பயனாளர்களுடன் இணைக்கிறது.
இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட ஸ்டால் கள், ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் முனைவோர் மற்றும் வணிக பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.



