கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச்செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தினால் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பணிகள் தொடர்பாகவும், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நெடுஞ் சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் மூலம் மாவட்டத்தில் மேற்கொள் ளப்படும் சாலைப் பணிகளின் விவரம், புதியதாக அமைக்கப் பட்டுள்ள சாலைகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டப் பணிகளின் நிலைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் அனைத்து சாலைப் பணிகளையும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்திடவும், முன் னெச்சரிக்கை நடவடிக் கையாக தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக திகழும் வகையில் அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகவும், திட்டங்களின் பயன் அடித்தட்டு மக்கள் வரை சென்றடையும் வகையில் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும், மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் பணிகளை விரைவாகவும், தரமான வகையிலும் முடித்திட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாநக ராட்சி ஆணையாளர் அனு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



