fbpx
Homeபிற செய்திகள்வணிகர் நல வாரிய நிதி உதவி

வணிகர் நல வாரிய நிதி உதவி

தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரியத்தின் மூலம் ஈரோட்டைச் சார்ந்த இரண்டு வணிகர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு நிதி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பிபி அக்ரஹாரத்தைச் சார்ந்த முகமது நாசர் அலி மற்றும் அசோகபுரத்தைச் சார்ந்த சுயம்புலிங்கமுத்து ஆகிய இருவரும் மளிகைக்கடை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு இறந்துவிட்டனர். இவர்கள் இருவரும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருந்தனர். அதனால் அவரது வாரிசு தாரர்களான முகமது நாசரின் மனைவி ஜீலைகா மஸ்னூனா மற்றும் சுயம்புலிங்கமுத்துவின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருக்கு இழப்பீடுத் தொகை ரூ. 3 லட்சம் வணி கவரித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.

இருவருக்கும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் ஈரோடு மாவட் டத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சி யில் பேரமைப்பின் ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல் மற்றும் மாவட்டச் செயலாளர் பொ.இராமச்சந்திரன் ஆகியோர் காசோலைகளை வழங்கினர். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கி.லாரன்ஸ் ரமேஷ், நிர்வாகிகள் நெல்லை கி.ராஜா அருள் சேவியர், கி.ஸி.சாதிக் பாட்சா, நி.கமலஹாசன் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img