fbpx
Homeபிற செய்திகள்இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறைக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் குறைக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொது மக்களின் பல்வேறு பிரச்சனைகள் மீது ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு வட்டம் வாரியாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அளிக்கும் தகவல்களை விரிவாக கேட்டறிந்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை மேற் கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கடந்த மாதம் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் மீது எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் பிரச்சனைகள் மீது விரிவாக விவாதிக்கப்பட்டது. சாலை பாதுகாப்புக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறை மற்றும் காவல் துறையின் அறிக்கை யின் அடிப்படை யில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் அதிக அளவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் மாவட்டங்களில் இரா ணிப்பேட்டை இருந்து வருகிறது. இதனை குறைக்க அனைத்து துறை அலுவலர்களும் தங்களு டைய ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

சாலைகளில் தேவைப் படும் பாதுகாப்பு, வேகத் தடை, மின்விளக்குபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதிகளவில் சாலை விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும். சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையும் அதிகரிக்க வேண்டும். சாலை விபத் துகளை குறைக்கும் நடவ டிக்கைகளில் காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, போக் குவரத்து துறை ஆகியோர் இணைந்த குழுக்கள் சாலை விபத்துக்கள் அதிகரிக்கும் இடங்களையும் உயிரி ழப்புகள் விபத்துகளால் ஏற்படும் குறிப்பிட்ட இடத்தையும் கண்டறிந்து உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலை விபத்தால் ஏற் படும் உயிரிழப்புகளை கட்டுப் படுத்தி சாலை விபத்து குறைப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் தங்களுடைய பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தெரிவித்து அதற்கான நடவ டிக்கையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் (பொறுப்பு) மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img