fbpx
Homeபிற செய்திகள்கோவை கே.ஜி. திரையரங்கம் அதி நவீன வசதிகளுடன் 9 தியேட்டர் ஆக மாற்ற திட்டம் உதவி...

கோவை கே.ஜி. திரையரங்கம் அதி நவீன வசதிகளுடன் 9 தியேட்டர் ஆக மாற்ற திட்டம் உதவி தலைவர் ராமராஜ் பேட்டி

கோவை கேஜி சினிமா திரை யரங்கம்அதி நவீன கருவிகள் வசதிகளுடன் 9 தியேட்டர்களாக மாற்ற திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து கே.ஜி சினிமா தியேட்டர் நிறுவன துணைத் தலை வர் ராமராஜ்,இயக்குனர் கோவை கேஜி சினிமா திரையரங்கம் அதி நவீன கருவிகள் வசதிகளுடன் 9 தியேட்டர்களாக மாற்ற திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து கே.ஜி சினிமா தியேட்டர் நிறுவன துணைத் தலை வர் ராமராஜ்,இயக்குனர் ஸ்ரீதர் கிருஷ்ணா, மேலாளர் சண்முகவேல் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்களது கே.ஜி திரையரங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.ராமகிருஷ்ணன் அவர்களால் 1981 அம் ஆண்டு ராகம், தானம், பல்லவி மற்றும் அனுபல்லவி என்று நான்கு திரையரங்குகளாக நிறுவப்பட் டது.
இந்த திரையரங்கம் ஆசியாவி லேயே அதிகப்படியான 3000 இருக்கை களை கொண்டு வடிவமைக்கப்பட்ட திரையரங்கமாகும். மேலும்,இந்த திரையரங்கை 2019 ஆண்டு புனரமைக்கப் பட்டுள்ளது.
இந்த நான்கு திரையரங்குகளை ஒன்பது திரையரங்குகளாக மாற்றுவதற்கு தமிழக அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக பல்லவி திரையரங்கினை மட்டும் இரண்டாக பிரிப்பதற்கு அனுமதி பெற்று இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வடிவமைப்பு செய்யப்பட்டு வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள அதிநவீன திரைப்படக் கருவி மற்றும் அதனை சார்ந்த உபகரணங்களால் உலக தரத்திற்கு ஏற்ப நிறுவப்பட்டுள்ளது.
இத்திரையரங்கை அதிகாரப் பூர்வமாக அரசிடம் ஒப்புதல் பெற்று மிக விரைவில் “அந்தாரா “சினிமா திரையரங்கம் என்ற பெயரில் ரசிகர்க ளுக்காக திறக்கப்படவுள்ளது.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img