மேற்கு தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்து வமனையான கேஎம்சிஹெச் 1000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை மூட்டு வலி நோயாளிகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குவதில் மருத்துவமனை கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
கேஎம்சிஹெச் பயன்படுத்தும் அதி நவீன ரோபோடிக் தொழில்நுட் பம், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நிகரற்ற துல்லியம் மற்றும் நோயின் தன்மைக்கேற்ப மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ய உதவுகிறது.
இந்த மேம்பட்ட அணுகுமுறை துல்லியமான இம்பிளாண்ட், மென்மை யான திசுக்கள் சேத மாவது குறைதல், மருத் துவமனையில் தங்கும் காலம் குறைதல், விரை வான குணமடைதல் மற்றும் நீண்ட கால செயல்பாட்டு மேம்பாடு ஆகிய பல நன்மைகளை நோயாளிகளுக்கு அளிக்கி றது.
இது குறித்து கேஎம்சி ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில், “1000 ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் என்பது வெறும் எண் மட்டுமல்ல; இது 1000 தனிநபர்களை நோயின் பிடியில் இருந்து மீட்டெடுத்ததைக் குறிக்கி றது. இந்த சாதனையை சாத்தியமாக்கிய எங்கள் எலும்பியல் குழு மருத்துவர்கள் டாக்டர் திரு மலைசாமி, டாக்டர் தென் னவன், டாக்டர் லெனின் பாபு , டாக்டர் பாஸ்கரன், டாக்டர் பூபதி கிருஷ்ணன் மற்றும் எலும்பியல் துறை பணியாளர்கள் ஆகியோ ருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்றார்.
இது குறித்து கேஎம்சி ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், “ரோபோடிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தில் எங்களது இந்த சாதனை, மருத்துவ கண்டு பிடிப்புகளில் முன்னணியில் இருப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேம்பட்ட மருத் துவ தொழில்நுட்பம் மூலம் நோயாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்து வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்“ என்றார்.



