பெண்கள் திறனதி காரம் பெறுதல் மற்றும் சமூகத் தோடு மறு ஒருங்கிணைப்பு என்ற குறிக்கோள் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்ற நட வடிக்கையாக, காரிட்டாஸ் இந்தியா, ரூப் வி.கே. ஜெயின் அறக்கட்டளை (ஹைவே ரூப் பிரிசிஷியன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவு) ஆகியவற்றுடன் இணைந்து ‘மனசி’ திட்டத்தை ரெஹபோத் பப்ளிக் சாரி டபிள் டிரஸ்ட் தொடங்கியிருக்கிறது.
இது, மனநிலை சார்ந்த சவால்களை எதிர் கொள்ளும் பெண்களுக்காக சென்னையில் ரெஹபோத் புகலிட இல்லத்தில் தங்கியிருக்கும் பெண்களின் உளவியல் சமூக மறு வாழ்வை மையமாகக் கொண்ட சமூக அடிப் படையிலான ஒரு முயற்சி.
இத்திட்ட தொடக்க நிகழ்வில் முக்கிய விருந்தி னர்களான ஹைவே ரூப் நிறுவனத் தலைவர் மொஹித் ஆஸ்வால், தலைமை நிர்வாக அதிகாரி தர்மேஷ் அரோரா, தொழி லக தலைவர் விஜ யேந்திரா, காரிட்டாஸ் இந்தியாவின் நிர்வாக இயக் குனர் ஜேசுதாஸ் மற்றும் ரெஹபோத் டிரஸ்ட் இயக்குனர் சோரைடா சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவன (NIEPMD) இயக்குனர் டாக்டர் அமர்நாத் மற்றும் மாவட்ட அளவிலான இந்த நிறுவனத்தின் மூத்த அலுவலர்களும் பங்கேற் றதன் மூலம் இந்த தாக்கம் மிகுந்த முயற்சியின் கூட்டுச் செயல்திறனை வலியுறுத்தியது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, ரூப் வி. கே. ஜெயின் அறக்கட்டளை, மருத்துவ உதவிகள் மற்றும் சுகாதார சேவைகள் மூலம் ரெஹபோத் இல்லத்தில் உள்ள பெண்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகிறது.
‘மனசி’ திட்டத்தின் தொடக் கத்தால், இந்த நீண்டகால கூட்டாண்மை இன்னும் ஆழமாகி இருக்கிறது. உளவியல் சமூக மறுவாழ்வு, திறன் மேம்பாடு மற்றும் சமூக மீள்ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளிலும் இந்த அறக் கட்டளையின் ஆதரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



