fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் 10 லட்சம் மரங்கள் நட குழந்தைகள் அமைப்பு திட்டம்

கோவை மாவட்டத்தில் 10 லட்சம் மரங்கள் நட குழந்தைகள் அமைப்பு திட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் குழந்தைகள் அமைப்பான சிஐஓ தேசிய அளவில் ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை மண்ணிலே கரங்கள். இந்தியாவோடு இதயங்கள் என்ற மையக் கருத்தில் சுற்றுச்சூழலை மையப்படுத்தி பிரசாரம் செய்கிறது.

குழந்தைகளால் நடத்தப் படும் இந்த அமைப்பின் செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ்கிளப்பில் நடை பெற்றது. அப்போது கோவை மாவட்டத் தலைவர் நபீளா சுரம் கூறியதாவது:
சிஐஓ என்பது 5 முதல் 12 வயது உள்ள குழந்தைகளை நல்வழிப் படுத்தும் ஓர் குழந்தைகள் அமைப்பு என்றும் வரலாறு, நல்லொழுக்க போதனை கள், திறமைகளை வளர்க்கும் போட்டிகள் என குழந்தைகளை நல் வழிப்படுத்துவதே இதன் நோக்கம். ஐந்தில் வளை யாதது ஐம்பதில் வளையாது என்பதை கருத்தில் கொண்டு குழந்தைகளை நாளைய தலைவர்களாக மாற்றுகிறது சிஐஓ.

சாலை பெரிதாக்குதல், தொழிற்சாலை கட்டுதல்,கிராமங்களை நகரமாக ஆக்குதல் போன்ற காரணங்களுக்காக மரம் வெட்டப்படுதலை நாம் பார்க்கிறோம். மரம் மனித வாழ்விற்கு அடிப்படை மரங்களை வெட்டிக் கொண்டே போனால் இயற்கை சமநிலை முற்றிலும் மாறிவிடும். அதனால் தான் மரங்களை வளர்த்தல் என்பது அவசியமாகி விட்டது.
மரங்கள் நமக்கு ஆக்ஸிஜன் தருகின்றன. இது மனிதனின் வாழ்வுக்கு முதன்மையானது. மரங்கள் மழையை அதிகரிக்கின்றன மண் அரிப்பு மற்றும் வெப்பமண்டல மாற்றத்தை குறைக்கும். மரங்கள் விலங்குகளுக்கும், பறவை களுக்கும் வாழ்விடம் தருகின்றன.

மேலும் மரங்கள் நமக்கு பழங்கள்,மருந்துகள் மற்றும் நிழலை அளிக்கின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் நாசம்,மழை குறைபாடு, காலநிலை மாற்றம் போன்ற பிரச்னை கள் மனிதனால் வந்தவை.


இதை சமாளிக்க ஒரே தீர்வு மரம் வளர்ப்பது.ஒரு மரம் வளர்த்தால் ஒரு உயிரை காப்பது போன்றது அதனால் தான் மண்ணிலே கரங்கள் இந்தியாவோடு இதயங்கள் எனும் இந்தப் பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளது.


நாங்கள் 10 லட்சம் மரங்களை நடப்போகிறோம் அதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறப்போகிறோம். மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி இந்த மாதம் இறுதியில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளேம்.இந்தப் பேரணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மட்டும் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img