தமிழக முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் வருகையை முன் னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, மறுநாள் 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிதம்பரத்தில் ரூ.6 கோடியே 39 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி போராளி -எல்.இளைய பெருமாள் நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி சிதம்பரத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது துறை சார்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அப்போது, நிருபர்களி டம் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகையில், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லின் வருகிற 14-ந் தேதி சிதம்பரத்திற்கு வருகை தர இருக்கிறார். அதை தொடர்ந்து 15-ந்தேதி இளைய பெருமாள் சிலையை திறந்து வைக்கும் அவர்,மக்களை சந்திக்கிறார். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டு போனவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சிதம்பரம் சப்-கலெக்டர் கிஷன்குமார், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, நீர்வளத் துறை செயற்பொறியாளர் காந்தரூபன் உள்பட பல் வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



