நாமக்கல் நரசிம்மர் கோயில் அறங்காவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நாமக்கல் நரசிம்மர் கோயில் பரம்பரை முறை வழி சாரா அறங் காவலர் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2025-2027 ஆம் ஆண்டுக்கான அறங் காவலர் குழு தலைவ ராக கா.நல்லுசாமி மற்றும் உறுப்பினர்கள் எம்.ஜி.எஸ். ரமேஷ் பாபு, சௌ.செல்வ சீராளன், ராம.ஸ்ரீனிவாசன், மல்லிகா குழந்தைவேல் ஆகி யோர் நியமிக்கப்பட்டனர்.
இதற்கான பதவி ஏற்பு விழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் உதவி ஆணையர் இரா.இளையராஜா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஈரோடு மண்டல அறநி லையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பங்கேற்று வாழ்த்தி பேசினார்.
இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, மாவட்ட அறங்காவலர் ரங்கசாமி, தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் குழந்தைவேல் மற்றும் நாமக்கல் நகர, மாவட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



