fbpx
Homeபிற செய்திகள்மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி சேலம் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் நடைபெற்றது.

அதில் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவிகள் வர்ஷினி மற்றும் ரசிகா ஈரோடு மாவட்ட மல்யுத்த அணியின் சார்பாக பங்குபெற்று 50 கிலோ மற்றும் 53 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின் தலைவர் சி.ஜெயக்குமார், செயலர் சந்திரசேகர், முதல்வர் பொறுப்பு பார்வதி மற்றும் உடற்கல்வி இயக்குநர் மாலதி ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img