1975 ஜூன் 25ம் தேதி இந்திய அரசியலமைப்புக் வரலாற்றில் வெறும் ஒரு தேதி அல்ல, அது அதிகார பேராசையின் பேரில் ஜனநாயகத்தின் ஆன்மா நசுக்கப்பட்ட ஒரு கருப்பு நாள் என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமித்ஷா கூறியதாவது: 1975 ஜூன் 24ம் தேதி இரவு, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை அனுமதியின்றி, ஒரே ஒரு கையொப்பத்துடன் அரசியலமைப்பு முடக்கப்பட்டதைக் குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் கழித்து உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு, ஒரு குடும்பத்தின் அதிகார காக்கும் முயற்சிக்காக பாதிக்கப்பட்டது.
இன்றும் சில கட்சிகள் அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டுமென பேசுகின்றன; ஆனால் 1975 இல் அதே அரசியலமைப்பை அவர்கள் அழித்தனர்.
நாடாளுமன்றம், நீதித்துறை, பத்திரிகைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டது. அதே நேரத்தில், அந்த அவசரநிலை காலத்தில் அதிகார பலனை அனுபவித்தவர்கள், இன்றும் ஜனநாயகம் பற்றி பேசி வருவது எதிர்வினையாகும்.
இந்த நாளை ‘அரசியலமைப்புச் சட்டப் படுகொலை நாள்’ என அறிவித்திருப்பது, ஜனநாயகத்தின் மதிப்புகளை மீண்டும் வலியுறுத்தும் தேசிய விழிப்புணர்ச்சி. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா இன்று ‘அடிமைத்தன மனநிலையிலிருந்து விடுதலை’ அடைந்து, ‘நான்’ அல்ல, ‘நாம்‘ என்ற உணர்வில் வழிநடக்கும் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது.
இது ஒரு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; கலாச்சார மறுமலர்ச்சியின் தொடக்கமும் கூட. இவ்வாறு அவர் கூறினார்.



