fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் ஃபாட்டியா தொழில் வர்த்தக கண்காட்சி மே 2ல் தொடங்குகிறது

ஈரோட்டில் ஃபாட்டியா தொழில் வர்த்தக கண்காட்சி மே 2ல் தொடங்குகிறது

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபாட்டியா) சார்பில் வரும் மே இரண்டாம் தேதி ஈரோடு பரிமளம் மகாலில் 4 நாள் தொழில் வர்த்தக கண்காட்சி துவங்குகிறது. அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் அன்பரசன் கண்காட்சி துவக்கி வைக்கிறார்கள் என்று கூட்டமைப்பு தலைவர் வி கே ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மொத்தமுள்ள 210 அரங்கங்களில் 110 அரங்குகளுக்கு மத்திய மாநில அரசுகள் ரூபாய் 32,000 வாடகை கட்டணத்தில் மானியமாக தருகின்றன. தமிழகத்திலேயே மிக அதிக அளவு மானியம் இந்த கண்காட்சி மூலம் ஈரோடு மாவட்டம் பெற்றுள்ளது. இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோவையில் இருப்பது போன்ற மிகப்பெரிய தொழில் வர்த்தக கண்காட்சி அரங்கினை அமைப்பதாகும். இதற்காக அரசிடம் 10 ஏக்கர் நிலம் கோரியுள்ளோம்.

நிலம் கிடைத்தால் சங்கம் மூலமாகவே வர்த்தக மையம் அமைக்கப்படும். இக்கண்காட்சியில் மொத்தம் 30 பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர். சிறு குறு தொழில் அமைச்சகத்தின் கீழ் பதிவு பெற்றவர்களாக இருந்தால் அவர்க ளுக்கு மத்திய மாநில அரசுகளின் (கண்காட்சியில் ஸ்டால் வாடகை) மானியம் 100 சதவீதம் கிடைக்கும்.

இக்கண்காட்சி லாப நோக்கம் இன்றி நடத்தப்படுகிறது. எனவே நுழைவு கட்டணம் கிடையாது. கடந்தாண்டு வருடம் ரூபாய் 5 லட்சம் லாபம் கிடைத்தது. அதுவும் வணிகர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த சமூக சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் புதிய கருத்துக் கள் கொண்டு அமைக்கப் படும் ஸ்டால்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங் கப்படும். அதைத் தவிர மாணவ மாணவிக ளுக்கான போட்டிகள் மருத்துவ முகாம் கலாச்சார நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. இதை அடுத்து சிறு குறு தொழில்துறை மூலம் வாங் குவோர் விற்பனையாளர் சந்திப்பு மாநாடு மாநில அளவில் பாட்டியா நடத்த உள்ளது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கார துவக்கத்திலும் நிறைவு விழாவில் மாவட்ட எஸ்பி சுஜாதாவும் மற்றும் பல எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொள் கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img