fbpx
Homeபிற செய்திகள்பிரமல் பைனான்ஸின் ‘ஆய்வ்’ நிகழ்ச்சி ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகிறது

பிரமல் பைனான்ஸின் ‘ஆய்வ்’ நிகழ்ச்சி ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகிறது

ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில்
பிரமல் பைனான்ஸின் ‘ஆய்வ்’ நிகழ்ச்சி இப்போது தமிழ்நாடு பார்வையாளர்களுக்காக ஒளிபரப்பாகிறது.

“ஆய்வ்” என்ற நிகழ்ச்சி, நிதிச் சவால்களை எதிர்கொண்டு அதை வெற்றிகரமாக சமாளித்திருக்கும் வாடிக்கையாளர்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை சுவாரஸ்யத்தோடு வழங்குகிறது.


இதனை ஓடிடி தளங்களில் வெளியிடுவதன் மூலம், ‘ஆய்வ்’-ஐ தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பரந்த தளத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வது பிரமல் ஃபைனான்ஸ்-ன் குறிக்கோள் இலக்காகும்.

பிரபல நடிகர் நிழல்கள் ரவி தொகுத்து வழங்கிய நெகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் நேர்காணலில், அபிஷ் கிளிண்டனின் சொந்த வீடு வாங்கும் பயணம் நம்பிக்கையின் நற்பண்பை நேர்த்தியாக வெளிப்படுத்துவதாக இருந்தது.

பிரமல் பைனான்ஸின் சந்தையாக்கல் துறை தலைவர் அரவிந்த் ஐயர் கூறுகையில், “ஆய்வ் தொடர் நிகழ்ச்சி ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகியவற்றில் ஒளிபரப்பாவதன் மூலம், இந்த ஊக்கமளிக்கும் கதைகளை இப்போது இன்னும் பரந்த பார்வையாளர்களுடன், குறிப்பாக தமிழ்நாடு போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சந்தைகளில் பகிர்ந்து கொள்ள முடியும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img