ஸ்பெக்ட்ரா மெடிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இஃபோடோன் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு இந்தியாவில் எண்டோலிஃப்ட் X என்பதை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு மிக நவீன, அறுவை சிகிச்சை அல்லாத லேசர் சிகிச்சையாக எண்டோ லிஃப்ட் X அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒரு லேசர் சாதனத்துடன் இணைக்கப்பட்ட புத்தாக்கமான கண்ணாடி இழை, மைக்ரோ ஃபைபர்களை எண்டோலிஃப்ட் X பயன்படுத்துகிறது.
சென்னையில் அமைந்துள்ள ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் எண்டோ லிஃப்ட் Xன் அறிமுக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சருமவியல் நிபுணர்கள், பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மருத்துவர்கள், ஊடக பணியாளர்கள் மற்றும் அழகியல் தொழில்துறை வல்லுநர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
இது குறித்து ஸ்பெக்ட்ரா மெடிக்கல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலாக்க அதிகாரியுமான ராம், கூறுகையில், “இந்தியாவின் அழகியல் தயாரிப்புகளுக்கான தொழில்துறை மிகப்பெரிய நிலைமாற்றத்தை காணும் நிலையில் இருக்கிறது” என்றார்.
இந்நிகழ்வில் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக் டர். ஜெயந்தி ரவீந்திரன், சென்னையைச் சேர்ந்த சருமவியல் நிபுணர்கள் டாக்டர். சரண்யா மற்றும் டாக்டர். விக்னேஷ் கார்த்தி, மும்பையை சேர்ந்த டாக்டர். பிரியம் பகத் ஆகியோர் பாரம்பரியமான முகப் பொலிவேற்றங்களுக்கு எண்டோலிஃப்ட் எப்படி ஒரு திறன்மிக்க மாற்றாக இருக்க முடியுமென்று விளக்கி கூறினர்.
யூஃபோடன் நிறுவனத்தைச் சேர்ந்த பியான்கா கொசுலிச் பேசு கையில், “இந்தியாவில் எண்டோலிஃப்ட் X அறிமுகத்தின் மூலம் அளவிலா உற்சாகம் கொள்கிறோம்“ என்றார்.