fbpx
Homeபிற செய்திகள்உலக அமைதிக் குழுவின் மகளிர் தின விழா

உலக அமைதிக் குழுவின் மகளிர் தின விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தேனி மாவட் டம், பழனிசெட்டி பேரூராட்சிக் குட்பட்ட ஏ. பி.எம் ஹோட் டலில் உலக அமைதி குழு வின் சார்பில் பல்வேறு துறை களில் சிறந்து விளங்கிய மகளிர்களுக்கான விருது-2025 வழங்கும் விழா தேனி மாவட்ட உலக அமைதிக்குழுவின் மகளிர் அணி அமைப்பாளர்கள் திருமதி. பிரியங்கா மற்றும் திருமதி.மணி ஆகியோர் தலைமையில் இன்று (08.03.2025) நடைபெற்றது.
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் உலகம் முழுவ தும் மார்ச் மாதம் 8- ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, உலக அமைதி குழுவின் சார்பில் தேனி மாவட்டத்தில் கல்வி, சுகா தாரம், மருத்துவம், பொது சேவை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மகளிர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருமதி ரமணி பாலகிருஷ்ணன் திருமதி மதனகுமார் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் வனஜா மருத்துவர் சந்திரா மோகன் குமார் பிரபா மற்றும் ராஜம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.
மேலும், கோடங்கிபட்டியில் செயல்பட்டு வரும் மனிதநேய காப்பகத்தில் பயின்று வரும் பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது
விழாவில் தேனி மாவட்ட உலக அமைதி குழுத் தலைவர், செயலாளர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழா முடிவில், மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் செவிலியர் செல்வி பி. சுதா நன்றியுரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img