fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் மூளைச்சாவடைந்தவரின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு

திருப்பூரில் மூளைச்சாவடைந்தவரின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு

திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (46). இவரது மனைவி மேனகா. முருகானந்தம் கடந்த 6ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரது மனைவி மேனகா கணவர் முருகானந்தம் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், ஒரு சீறுநீரகம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி ‘’முருகானந்தம் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img