தன்னாட்சி தகுதியுடன் தேசியத் தரச் சான்றும் A+ தர மதிப்பீடும் பெற்றுள்ள கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல் கல் லூரியில் ஓணம் கூத்து என்ற தலைப்பில் ஓணம் கொண்டாட்டம் 11.09.2024 அன்று தொடங்கி 13.09.2024 வரை மூன்று நாள்கள் சிறப்பாக நடந்தது.
ஓணம் விழாவின் சிறப்பாக மகாபலி மன்னன் ஹெலிக்காப்டரில் வந்திறங்கி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். முதல் நாள் அன்று பூக்கோலம், பாயாசம் செய்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.பூக்களால் அலங்கரிக்கப் பட்ட பூக்கோலமிட்டு மாணவர்கள் மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து கேரளாவின் சுவையான பாயசங்களான அடப்பி ரதமன், முக்கனி பாயாசம், இளநீர் பாயாசம், பால் பாயாசம் போன்ற 20 வகையான பாயாசங்களை சுவையாக செய்து அசத்தினர்.
கேரள நடனங்களையும் ஆடி மகிழ்ந்தனர். மறுநாள் (12ம் தேதி) அன்று கேரளா வின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், உறியடி போன்ற போட்டிகள் துறைகளுக்கிடையேயும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியேயும் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியைகள் பங்குப்பெற்ற கேரளாவின் பாரம்பரிய மெகா திருவாதிரை நடனம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்தப் போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மூன்றாம் நாளான நேற்று சிங்காரி மேளம், தம்போலம், நாசிக் டோல் மற்றும் பல்வேறு பேண்டு வாத்தியங்களோடு மகாபலி மன்னன் புடை சூழு மாணவர்கள் நவக்கரையிலிருந்து ஊர்வலமாக வந்தனர். அதனைத்தொடர்ந்து மகாபலி மன்னனை வரவேற்கும் மாணவர்க ளின் பூக்கோலம் கல்லூரியை அலங்கரித்தது.
கேரள பாரம்பரிய நடனங்களான ஓட்டன் துள்ளல், கதகளி, மோகினி ஆட்டம், களரி பயிட் மாணவர்களை பரவசப்படுத்தியது. மாணவிகள் அனை வரும் தூய வெள்ளை நிற கேரள பாரம்பரிய ஆடை அணிந்து பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ரொக்கபரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கேரளாவின் சிறப்பு உணவுகளான 26 வித ஓணம் விருந்து அசத்தலான சுவையுடன் அனைத்து மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் ஒன்றிணைந்து உணவை ருசித்தும், பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
ஏஜேகே கல்வி நிறுவ னங்களின் தலைவர், நிறுவனர் முனைவர் பேராசிரியர். அஜீத் குமார் லால் மோகன் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவமாக கருதப்படும் ஒற்றுமை, மகிழ்ச்சி, செல்வம் இவை அனைத்தும் ஒரு சேர அனைவரிடமும் கொண் டுச் சேர்க்க வேண்டும் என்றுக்கூறி மாணவர்களை வாழ்த்தினார்.



