கிருஷ்ணகிரி அணையில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண், பெண் இருபாலருக்கும், இலவசமாக தேனீ வளர்ப்பு, பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தற்போது ஆண், பெண் இருபாலருக்கும் 10 நாட்கள் தேனீ வளர்ப்பு பயிற்சி, பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி ஆகியவை விரைவில் துவங்க உள்ளன.
இதற்கு, 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும், வருகிற 16ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி அணை பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும்.
முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி.
மேலும், 94422&47921, 90806 &76557 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



