கோவை சவுரிபாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கெபி (சிற்றாலயம்) உள்ளது. இந்த திருத்தல தேர்த்திருவிழாவை முன்னிட்ட கொடியேற்று விழா நடந்தது. விழாவை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு திருப்பலி மற்றும் இரவு 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதனை கோவை மறை மாவட்ட இளைஞர் பணிக்குழு செயலர் ஞானப்பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இதில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத்தந்தை மரிய ஜோசப், உதவி பங்கு தந்தை நவீன் ஆண்டனி, பங்கு மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



