தொழில்நுட்ப செயல்பாட்டு மையம் சார்பில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திறன் பயிற்சிக்காக நேர்காணல் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஒடிஸா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 26 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிரி தொழில்நுட்பத்துறை எம்.எஸ்சி., இரண்டாமாண்டு மாணவிகள் ம.ஸ்நேகா, கோ.மகேஷ்வரி, ரா.சுபவர்ஷினி, பி.எஸ்சி. மூன்றாமாண்டு மாணவர் அசோக் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் ஆகஸ்டு மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை, உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, புதுமையான ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திறன் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
பயிற்சி முடித்து திரும்பிய மாண வர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக் கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட் சுமிநாராயணசுவாமி வாழ்த்தினார்.
இதே போல், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், உயிரி தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் ஆர்.சுபாஷ்குமார் ஆகியோரும் மாணவர்களைப் பாராட்டினார்.



