fbpx
Homeபிற செய்திகள்உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் அசத்தல்

உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் அசத்தல்

உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் கேரளா மாநில சிலம்ப சம்மேளனம் இணைந்து திருவனந்தபுரத்தில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தினர்.

இதில் இந்திய அணிக்காக கோவை மாவட்ட இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி சார்பில் 38 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 27 தங்கம், 21 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 71 பதக்கங்கள் வென்றனர்.

இதில் மினி சப் ஜுனியர் பிரிவில் நேகா ஸ்ரீ, ஜாக்குலின் பீட்டர், தன்யாஸ்ரீ, ஹன்சிகா, பிரேம்சாய், ஹாரிக்ளேவர், ஸ்ரீதர்ஷன், டோனி, வைஷ்ணா, ரக்க்ஷன், நவினேஷ், அக்க்ஷன், நிஷ்வந்த், யுவதர்ஷன், சப் ஜுனியர் பிரிவில் இனியா, சஷ்வந்த் விஜயன், ரித்திக், பிரனேஷ், சஞ்ஜித், சச்சின் ஆலிவர், அஞ்சனா, கவிநேத்ரா, ஹரீஸ், ஜோ அர்னவ், ஜுனியர் பிரிவில் ஹிர்த்திக் கிஷன், ரூபேஸ்குமார், ராகுல், அபிஜித், அஜய், சுதர்ஷன், ஜெயசிம்மன், பிரணவ், தரணிதரன், நேத்ரா ஸ்ரீ, மேரி பிரியதர்ஷினி, சரித்ரா, ரித்திகா, சீனியர் பிரிவில் அபிமன்யு ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.

இவர்களை அகில இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப சங்கம், கோவை மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்கம், சிலம்பாலயா அறக்கட்டளை தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img