fbpx
Homeபிற செய்திகள்வேளாண்மை பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

வேளாண்மை பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் முனைவர் திரிலோச்சன் மஹாபத்ரா கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர். இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் இணைவேந்தரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img