fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் விநாயகர் சதுர்த்தி விழா: 85 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்த இந்து முன்னணி

மேட்டுப்பாளையம் விநாயகர் சதுர்த்தி விழா: 85 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்த இந்து முன்னணி

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பா ளையம் இந்து முன்னணி பேரியக்கம் நடத்தும் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று மிக சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் கோ பூஜை விளக்கு பூஜை அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து 9ம் தேதி மாபெரும் விசர்ஜன ஊர்வலம் மற் றும் பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையத்தில் 85 விநாயகர் சிலைகளும், காரமடையில் 202 சிலை கள், சிறுமுகையில் 45 சிலைகள், அன்னூரில் 45 இடங்களிலும் சுற்றுவட் டார பகுதியில் சேர்ந்து 400க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3 ஆம் நாளன்று ஊர்வலமாக சென்று சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன் னணியின் கோவை கோட்ட செயலாளர் ராஜ் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ் குமார், துணைத்தலைவர் தங்கவேலு ஆகியோர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் சக்தி விநாயகர் கோவில் வளா கத்தில் பிரதிஷ்டை செய் துள்ள 9 அடி விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img