திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பாக உலக முதுகு தண்டுவடம் பாதிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேர ணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதியை தண்டுவட பாதிப்பு நாளாக கருதி உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு தண்டுவட காயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தையொட்டி “தண்டுவடம் காயமடைத்தோர் அமைப்பு” சார்பில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 முதல் 5.0 லட்சம் மக்கள் தண்டுவட காயத்திற்கு உள்ளாகிறார்கள். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகையில் 4 முதல் 8 பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்டுவட காயம் ஏற்படுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு பேரணியில் முதுகுத்தண்டு பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்தும், தலைக்கவசம் மற்றும் உயிர்க்கவசம் அணிதல், செல்போன், ஹெட் போன் தவிர்த்தல், சீட் பெல்ட் அணிதல், அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, ஒரு நொடி விபத்து வாழ்நாள் பாதிப்பாகும். எனவே, விபத்துகளை தவிர்ப்பது மிகவும் அவசியம் எனவும், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும்.
ஆதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும் என பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல இளநிலை அலுவலர் செல்லி சூர்யா மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



