மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காவல் துறையினரின் சார்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று கொடி அணிவிப்பு ஊர்வலம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அபிராமி தியேட்டர் அருகே இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் கோவை ஆயுதப்படையினர், அதிவிரைவுப்படையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர், கலவர தடுப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசார் நவீன ஆயுதங்களுடன் சுமார் 300க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா வாகனம் மற்றும் காவல்துறை வாகனங்களும் கொடி அணிவகுப் பில் கலந்து கொண்டன.
தொடர்ந்து மேற்கு மண் டல காவல்துறை தலைவர் செந்தில் குமார் அறிவுறுத்தலின்படி விநாய கர் சதுர்த்தியன்று சிலைகள் வைக்கப்படும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறும் செப்.9 ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி சிலைகளை எடுத்துச்செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிலைகள் அனைத்தும் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடி அணிவகுப்பில் மேட்டுப்பாளையம் உட் கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, ஆயுதப்படை துணை கண்காணிப் பாளர் உதயகுமார், காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், செல்வம், நிர்மலா, உதவி ஆய்வா ளர்கள் குருசந்திர வடிவேல், ஆனந்தகுமார், செந்தில்குமார் உட்பட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.



