கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியிலுள்ள 12 இளங்கலை பொறியியல் துறைகளில், செயற்கை நுண்ணறிவியல் மற்றும் இயந்தி ரக்கற்றல், உயிர் மருத்து வப்பொறியியல், மின்னணு வியல் மற்றும் தகவல் தொடர்பியல், கணினி அறிவியல் மற்றும் வணிகப் பகுப்பாய்வியல், செயற்கை நுண்ணறிவியல் மற்றும் தரவு அறிவியல், மற்றும் இயந்திரப்பொறியியல் ஆகிய 6 துறைகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்விற்கு கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கேபி ராமசாமி தலைமையில் சிறப்பு விருந்தினரான கார்கில் நிறுவனத்தின் சர்வ தேச மனிதவள தலைவர் நடராஜ பெருமாள் மற்றும் கௌரவ விருந்தினரான, ஆரக்கல் நிறுவனத்தின் துணை தலைவர் பாலாஜி துரைசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் முதலாமாண்டு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரியின் தலைவர் டாக்டர் கே.பி ராமசாமி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



