கோடக் மஹிந்திரா பேங்க் லிமிடெட் கோடக் ஃபால்கன் கார்டு என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணிக்கிற இந்தியர்களுக்காக ஒற்றை கரன்சியிலான ப்ரீபெய்டு ஃபாரெக்ஸ் கார்டை அறிமுகம் செய்திருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணம் செலுத்தலுக்காக கோடக் ஃபால்கன் கார்டை பயன்படுத்தும் பயணிகள் 100+ சுற்றுலாத் தளங்கள், சாகச விளையாட்டுகள், ஷாப்பிங், டைனிங் மற்றும் தனித்துவமான அனுபவ அமைவிடங்களில் உடனடி தள்ளுபடிகளை பெறுவார்கள்.
கோடக் மஹிந்திரா வங்கியின் பிசினஸ் பேங்கிங் மற்றும் தலைமை சந்தையாக்கல் அதிகாரி மற்றும் என்ஆர்ஐ பிரிவிற்கான தலைவர் ரோஹித் பாஸின், மெர்குரி பேமெண்ட் சர்வீஸ்-ன் தலைமை செயல் அலு வலர் முஸாஃபர் ஹமித் மற்றும் என்பிசிஐயின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் இணைந்து குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் கோடக் ஃபால்கன் கார்டை அறிமுகம் செய்தனர்.
ஒற்றை கரன்சியிலான இந்த ப்ரீபெய்டு பாரெக்ஸ் கார்டு இந்தியர்களுக்கு ஒரு தனித்துவமான சலுகை திட்டமாக இருக்கும்.
கோடக் ஃபால்கன் கார்டு, அடுத்த இரண்டு மாதங்க ளில் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு கிடைக்கும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



