fbpx
Homeபிற செய்திகள்தி யுனைடெட் கல்வி நிறுவனத்தின் மாணவர் இடைவினை தொடர்பு நிகழ்வு

தி யுனைடெட் கல்வி நிறுவனத்தின் மாணவர் இடைவினை தொடர்பு நிகழ்வு

மாவட்ட இடைவினை தொடர்பு இயக்கம் இந்த கல்வியாண்டிற்கான இரண்டாவது “மாணவர் இடைவினை தொடர்பு நிகழ்வை” தி யுனைடெட் கல்வி நிறுவனத்தில் நடத்தியது.

இதில் தி யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக இடைவினைகளையாற்றி நிகழ்வைச் சிறப்பித்தனர். முதல் நிகழ்வாக கடவுள் வாழ்த்துப் பாடலை மாணவிகள் தனுஜா, கிருத்திகா மற்றும் பெனிட்டா ஆகியோர் பாடினர்.

தொடர்ந்து, கோயம்புத்தூர் எலைட் ரோட்டரியின் உறுப்பினர் வி.ஏ.ஜே.மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். பின், சிறப்பு விருந்தினரான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லா ராகவேந்திரா, ஜூகி தாக்கூர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இதில் பயிற்சி முறைகள் பற்றி முன்னாள் உறுப்பினர் மாணவி மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். பின், 2024-2025ம் ஆண்டிற்கான மாணவர்கள் இடைவினை தொடர்பு குழு தி யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவி ரிதன்யா தலைமையில் உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து, கோயம்புத்தூர் எலைட் ரோட்டரியின் உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட இடைவினை தொடர்பு இயக்கத்தின் தலைவர் ஹென்றி அமல்ராஜ், கோயம்புத்தூர் எலைட் ரோட்டரியின் இணை ஒருங்கிணைப்பாளர் மாணவி.திரிசலாகுமாரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img