fbpx
Homeபிற செய்திகள்கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய கொடியேற்று விழா

கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய கொடியேற்று விழா

கோவை சவுரிபாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு புனித வேளாங்கண்ணி ஆரோக் கிய மாதா கெபி (சிற்றாலயம்) உள்ளது. இதற்கான தேர்த்திருவி ழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று மாலை நடந்தது. கோவை மறை மாவட்ட பொருளாளர் அந்தோணி செல்வராஜ் கொடியேற்றி வைத்தார். சவுரிபாளையம் பங்குத்தந்தை மரிய ஜோசப், உதவி பங்கு தந்தை நவீன் ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொட்டும் மழையிலும் மரியே வாழ்க என்கிற முழக்கத்துடன் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
விழாவை தொடர்ந்து வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பலி மற்றும் மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img