fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடியில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்ப கவத் செய்தியாளர் களுடன் சென்று களஆய்வு மேற்கொண்டார்கள் ஏரல் வட்டம் குரும்பூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி பணிக்க நாடார் குடியிருப்பை பார்வையிட்டு அங்கு தங்கி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் இரவு உணவினை ஆய்வு செய்து மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

மேலும், அகரம் ஊராட்சியில் உள்ள ஆவின் பாலகத் தினை பார்வையிட்டு அங்கு விற்கப்படும் பால், மற்றும் இதர ஆவின் தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்ததை தொடர்ந்து, பழையகாயல் ஊராட்சியில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பழைய காயல் ஊராட்சி புனித மரியன்னை நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில்
வழங்கப்படும் உணவு குறித்து உணவருந்தி ஆய்வு செய்து அங்கு பயிலும் மாணவியர்களிடம் காலை வழங்கப்படும் உணவு ருசியாக இருக்கின்றதா அவர்களுக்கு பிடித்திருக்கிறதா என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டு கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சி யர் சுகுமாரன், ஏரல் வட்டாட்சியர் கோபால், உதவி இயக்குநர் (ஊராட்சி) உலகநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா, திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img