இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா, 180 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள் ளது. அதிகபட்ச ஆண்டு விகிதமான 8.10% சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு முடித் துக்கொள்ள முடியாத வைப்புத்தொகையின் கீழ் அதன் 666 நாட்கள் நிலையான வைப்புத் தொகையில் ரூ.3 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை பாங்க் ஆஃப் இந்தியா, உயர்த்தியுள்ளது.
மேலும் இப்போது 180 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 6% வழங்குகிறது. மேலும், ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்தி யுள்ளது. இப்போது 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 6.50% மற்றும் 211 நாட்கள் முதல் 1 வருடத் திற்கு குறைவாக 6.75% வழங்குகிறது.
சூப்பர் சீனியர் சிட்டிசன்களின் டெபாசிட்களுக்கு 0.65% கூடுதல் வட்டி விகிதம் மற்றும் ரூ.3 கோடிக்கு கீழ் உள்ள மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு 0.50%, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வு காலத்துடன் நிலையான வைப்புகளுக்கு கூடுதலாக வட்டி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 7.30% என்ற சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கி தனது 666 நாட்கள் – நிலையான வைப்புத்தொகைக்கு சூப்பர் சீனியர் சிட்டிசன் (ஆண்டுக்கு) 7.95%, மூத்த குடிமகன் (ஆண்டுக்கு) 7.80% என்ற வீதத்தில் வழங்குகிறது. 666 நாட்கள் நிலையான வைப்பின் கீழ், நிலையான வைப்புத்தொகைக்கு எதிரான கடன் மற்றும் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த வொரு பேங்க் ஆஃப் இந்தியா கிளையிலும் இந்த வசதியை பெற்று பயனடையலாம்-.
அல்லது BOI ஆம்னி நியோ ஆப்/இன்டர்நெட் பேங்கிங்கைப் பயன்படுத்தி பாங்க் ஆஃப் இந்தியாவுடன் நிலையான வைப்புகளை இட்டு வைக்கலாம். திருத்தப்பட்ட கட்டணங்கள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.



