கோவை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் கிச்சன் கார்னிவல் 2024 “பஞ்சாபி உணவுத் திருவிழா” நடைபெற்றது.
இதில் கல்லூரியின் செயலர், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கன்வீனர் கமிட்டி குழு உறுப்பினர், பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன் குத்துவிளக்கேற்றி உணவுத் திரு விழாவை துவக்கி வைத்தார்.
தலைமை விருந்தினராக கோவை விமான நிலையம் இயக்குநர் செந்தில் வளவன், சிறப்பு விருந்தினராக கோவை ரெசிடென்சி டவர்ஸ் இயக்குனர் சார்லஸ் பேபியன், கௌரவ விருந்தினர்களாக கோவை ராடிசன் ப்ளு சமையல் கலை நிபுணர் பால் நவின் சந்தர், ஐடிசி ஹோட்டல் சமையல் கலை நிபுணர் கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்லூரி முதல்வர் எஸ்.ராஜு வரவேற்புரை வழங்கினார். முன்னதாக உணவுத்திருவிழாவின் தனிச்சிறப்பு மலரை (Souvenir) கல்லூரியின் செயலர் அஜீத் குமார் லால் மோகன் வெளியிட்டார்.
இந்த உணவுத் திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தின் 100 வகையான பஞ்சாப் உணவு வகைகள், 20க்கும் மேற்பட்ட சாலட் வகைகள் இடம் பெற்றிருந்தது.



