fbpx
Homeபிற செய்திகள்நெ.1 பல்துறை மருத்துவமனைகள் தரவரிசை பட்டியலில் கோவை கேஎம்சிஹெச் முதலிடம் ஆறாவது ஆண்டாக சாதனை

நெ.1 பல்துறை மருத்துவமனைகள் தரவரிசை பட்டியலில் கோவை கேஎம்சிஹெச் முதலிடம் ஆறாவது ஆண்டாக சாதனை

இந்திய மருத்துவமனைகளில் செயல்திறனை ஆராய்ந்து அதனடிப்படையில் பிரபல ஆங்கில பத்திரிகையான தி வீக் வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது. தி வீக் -ஹன்சா ரிசர்ச் சர்வே: இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் 2023 என்ற இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கேஎம்சிஹெச் மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக கேஎம்சிஹெச் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடுமையான போட்டிகளுக்கிடையே இந்த விருதையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து பெற்றுவருவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

தி வீக் பத்திரிகை சார்பில் பெங் களூர் நகரில் நடைபெற்ற விழாவில் கேஎம்சிஹெச் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரன் கோவையின் நெ. 1 பல்துறை மருத்துவமனை என்ற பெருமைமிகு விருதைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவின் சிறந்த மருத்துவம னைகளை மதிப்பீடு செய்யும் தி வீக் – ஹன்சா ரிசர்ச் சர்வே நாட்டின் முக்கிய மருத்துவமையங்களாக விளங்கும் தலைநகரப் பகுதியையும் இந்தியா முழுவதும் 17 நகரங்களிலும் தனது சர்வேவை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் நற்பெயர், மருத்துவர்களின் திறமை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள், நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை அளித்தல் ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டது.

“தி வீக் பத்திரிகையின் இந்த ஆய்வானது மருத்துவத் துறையினர் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றது. எங்களது தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவ சேவைக்கும், மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஊழியர் களின் திறமைக்கும் இந்த விருது ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. நகரில் நெ. 1 பல்துறை மருத்துவமனையாக தொடர்ந்து ஆறாவது ஆண்டாக விருது பெறுவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயமாகும்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, என்றும் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாக திகழ்வதையே இந்த விருது சுட்டிக்காட்டுகிறது” என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமாகிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img