தேனி மாவட்டத்தில் 4 நகராட்சி 2 பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று தொடங்கியது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர், எஸ்.என்.ஆர். கல்லூரியில், “மக்களுடன் முதல்வர்” திட் டத்தை நேற்று (18ம் தேதி) தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவி டப்பட்டதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில், தேனி- அல்லிநகரம் நகராட்சி பாலன்நகர், பொம்மைய கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள டி.சி.எஸ்.மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்களை பதிவு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
கம்பம் நகராட்சி ஜெ.எஸ்.டி மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சட்ட மன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் மனுக்கள் பதிவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
நகர்ப்புறப்பகுதியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு இணையதளத்தின் வயிலாக பதிவேற்றம் செய்து, அனைத்து மனுக்களுக்கும் 30 தினங்களுக்குள் சம்பந்தப் பட்ட துறைகளின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் வகையில் இத்திட்டம்செயல் படுத்தப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் 18.12.2023 முதல் 30.12.2023 வரை 10 நாட்கள் இம்முகாம் நடைபெறும். அதிகமாக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளுக்கு 2 நாட்களும், நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு தேர்வு செய்யப்பட்ட வார்டுகள் வாரியாக இம்முகாம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 553 மனுக்கள் பெறப்பட்டது. பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 213 மனுக்கள் பெறப்பட்டது. கம்பம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 206 மனுக்களும் போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 158 மனுக்களும் பெறப்பட்டது.
இதேபோல உத்தமபாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் 238 மனுக்கள் பெறப்பட்டது. வீரபாண்டி பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் 144 மனுக்கள் பெறப்பட்டது. மொத்தம் 1,512 மனுக்கள் இன்று நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்டது. இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர்கள் ரேணுபிரியா பாலமுருகன்(தேனி-அல்லிநகரம்), வனிதா நெப்போலின் (கம்பம்), உத்தமபாளையம் வரு வாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயணபாண்டியன், தனித்துணை ஆட்சியர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.