fbpx
Homeபிற செய்திகள்சிலம்பம், வில் வித்தை, குங்பூ, கராத்தே, யோகா: ஐந்து கலைகளை ஒரே இடத்தில் நிகழ்த்தி கோவை...

சிலம்பம், வில் வித்தை, குங்பூ, கராத்தே, யோகா: ஐந்து கலைகளை ஒரே இடத்தில் நிகழ்த்தி கோவை மாணவ, மாணவிகள் உலக சாதனை

கோவையில் சிலம்பம், வில் வித்தை, குங்பூ, கராத்தே, யோகா என ஐந்து வித்தைகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிகழ்த்தி 500 மாணவ, மாணவிகள் இணைந்து உலக சாதனை படைத்தனர், விளையாட்டு குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தும் விதமாக பைட்டர்ஸ் அகாடமி சார்பாக கோவை குனியமுத்தூர், சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலாயா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியில், யோகா, சிலம்பம், வில் வித்தை, கராத்தே, குங்பூ என ஐந்து கலைகளை ஒரே இடத்தில் ஐநூறு மாணவ, மாணவிகள் இணைந்து செய்தனர்.

ஏழு வயது முதல் 17 வயது மாணவ, மாணவிகள் வரை ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்த இந்த நிகழ்வு நோபில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை செய்த மாணவ, மாணவிகளை கூடியிருந்த பெற்றோர் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

கல்வி பயில்வதோடு விளையாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியதாக பள்ளியின் தாளாளர் ரவீந்திரன், முதல்வர் கார்த்திகாயனி ஆகியோர் தெரி வித்தனர்.

தொடர்ந்து நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் ரமேஷ் குமார் சிவ ராஜ் உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவு ரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img