fbpx
Homeதலையங்கம்ஜாதியில்லா சமுதாயம் மலர போராடிய அயோத்திதாசர்!

ஜாதியில்லா சமுதாயம் மலர போராடிய அயோத்திதாசர்!

திராவிடப் பேரொளி அயோத்திதாசர் 1845 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார்.

சித்த மருத்துவம் பயின்று, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் வல்லக்காலத்தி அயோத்திதாசர் எனும் தனது ஆசிரியர் பெயரை தன் பெயராகவே மாற்றிக் கொண்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர். ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர். பதிப்பாளர். மருத்துவர். பேச்சாளர். மொழியியல் வல்லுநர். பன்மொழிப் புலவர் என்ற பன்முக ஆற்றலைக் பெற்றிருந்தார்.

அயோத்திதாசப் பண்டிதர் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகங்களை கண்டு வெகுண்டெழுந்து சமூக சீர்திருத்த பாதையில் தனது பயணத்தை தொடங்கி சாதி ஒழிப்பையையும், சமூக விடுதலையையும் தனது லட்சியமாக கொண்டிருந்தார்.

தந்தை பெரியார், அயோத்திதாசப் பண்டிதரை பற்றி குறிப்பிடும்போது, “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி” என்று கூறினார்.

அயோத்திதாசர் சாதி, மத வேறுபாடுகளை நீக்கி தமிழன் என்ற உணர்வு அனைவரிடத்திலும் இருக்க வேண்டுமென்றார். சாதியால், மதத்தால், இனத்தால், நிறத்தால் உலகம் மாறுபட்டு தள்ளப்பட்ட போது உரிமைக் குரல் கொடுத்த நல்லோர்கள் வரிசையில் அயோத்திதாசப் பண்டிதரை மக்கள் அனைவரும் தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தை என போற்றி புகழ்ந்தனர்.

அயோத்திதாசர் தாமே முன்னின்று தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைக்கு அரும்பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவருக்கு கல்வி வசதியோடு உதவித் தொகை மற்றும் அரசு வேலையும், உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி கண்டார்.

பவுத்தம் என்ற புத்தநெறி, தமிழ்நாட்டில், குறிப்பாகத் தென்னாட்டில் வளர்வதற்கு அடித்தளமிட்டவர்களில் அவர் மிக முக்கியமானவர். திராவிடம் வேறு – புத்தம் வேறு அல்ல. இரண்டும் பகுத்தறிவு, சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது. அதைத்தான் ஆரம்பத்திலேயே உணர்த்தினார், அயோத்தி தாசப் பண்டிதர்.

அப்படிப்பட்ட திராவிடப் பேரொளி, திராவிட முன்னோடி அறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சென்னையில் முழுவுருவச் சிலையோடு மணிமண்டபம் அமைத்து அதனை இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல வரலாற்றுப் பெருமைக்குரியதுமாகும்.

வாழ்க அயோத்திதாசர் புகழ்! அவர் விரும்பிய ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாகும் காலம் விரைவில் மரலரட்டும்!!

படிக்க வேண்டும்

spot_img