தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற தொழில் முதலீடுகள் மாநாட்டில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.04 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.8.20 லட்சம் திட்ட மதிப்பிலான 2 பயணியர் ஆட்டோவிற்கான சாவியினை பயனாளிகளிடம் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட தொழில் மையபொது மேலாளர் ஸ்வர்ணலதா ஆகியோர் உள்ளனர்.



