அரசியலை மனிதநேயத்துடன் அணுகிய மாமனிதர் காந்தி என, கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவில் இந்திய தத்துவவியல் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் எஸ்.பன்னீர் செல்வம் பேசினார்.
இவ்விழாவுக்கு சிறப்புக்கல்வி மற்றும் கணிதத்துறை உதவிப்பேராசிரியை மிருனாலினி வரவேற்றார். அவினாசிலிங்கம் நிறுவன த்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் காந்தி யடிகளின் வாழ்க்கையைப் பற்றி உரையாற்றினர்.
பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், இணை நிர்வாக அறங்காவலருமான கௌரி ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், அவினாசிலிங்கம் அய்யா அவர்கள் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தவர். காந்தியடி களின் நினைவாக ஒவ் வொரு ஆண்டும் கதர் ஆடை அணிந்து விழா கொ ண்டாடுவதில் பெருமை யடைகிறோம் என்றார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வை.பாரதி ஹரிசங்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லருக்கு மகாத்மா காந்தி எழுதிய இரண்டு கடிதங்கள் குறித்து பேசினார்.
இந்திய தத்துவ கழக பொதுச் செயலாளரும், சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் எஸ்.பன்னீர் செல்வம் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
அவினாசிலிங்கம் அய்யா காந்தியடிகளின் கொள்கைகளை தம் வாழ்க்கையில் கடைப் பிடித்தார். அவர் கல்வி அமைச்சராக இருந்த போது அடிப்படைக் கல்வித் திட்டத்தை உருவாக்கினார். தமிழிலக்கியத்துக்கு தொண்டாற்றினார். ஆன்மீக வாதியாகவும் தேசப்பற்றுமிக்க தலைவரா கவும் இருந்தார்.
காந்தியடிகள் தத்து வவாதியும் இல்லை, சமயம் சார்ந்த மனிதருமில்லை. இதற் கெல்லாம் அப்பாற்ப ட்டவர். நாட்டை மட்டு மின்றி உலகத்தையே உயர்த் தக்கூடிய அவரது கருத்துகள் மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.
காந்தியடிகள் சொல், செயல் இரண்டிலும் உண்மையானவர். அரசியலை மனிதநேயத்துடன் அணுகிய மாமனிதர். இவரது சத்தியம், அகிம்சை மனித வாழ்க்கைக்குத் தேவைப்படும் இரு கண்களாகும். காந்தியடிகளின் கொள்கைகளை காலந்தோறும் பின் பற்றினால் உயர்வடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பல்கலைக்கழக பதிவாளர் சு.கௌசல்யா வாழ்த்தி பேசினார். இதைத் தொடர்ந்து அனைவரும் சமாதான உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். பொருளாதாரத்துறை தலைவர் காந்திமதி நன்றி கூறினார்.



