fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் பிரான்ஸ் பல்கலைக்கழக கண்காட்சி 2023

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் பிரான்ஸ் பல்கலைக்கழக கண்காட்சி 2023

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்காக ஐரோப்பாவின் முன்னணி நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் படிப்பதற்காக ‘பிரான்ஸ் பல்கலைக்கழக 2023’ கல்விக் கண்காட்சியை நடத்தியது.

கண்காட்சியில் அந்நாட்டின் பிரபல பல்கலைக்கழகங்களான எம் நார்மண்டி பிசினஸ் ஸ்கூல், போல் லியோனார்ட் டி வின்சி, ரென்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், ஆடென்சியா பிசினஸ் ஸ்கூல், மாண்ட்பெல்லியர் பிசினஸ் ஸ்கூல், எடிசி பாரிஸ், எபிடா ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சென்ட்ரல் நான்டெஸ் & லில்லி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

எம் நார்மண்டி பிசினஸ் ஸ்கூலைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மாணவர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளோம்.

இது போன்ற கண்காட்சிகள் அனைவருக்கும் கற்றல் அனுபவத்தை வளப்படுத்துவதோடு, இரு வழி கற்றல் செயல்முறைக்கான கதவைத் திறக்கின்றன என்றார்.

ரென்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ் பல்கலைக்கழகத்தச் சேர்ந்த அதிகாரி, இன்றைய சர்வதேசமயமாக்கப்பட்ட உலகில், இதுபோன்ற கண்காட்சிகள் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமாகும் என்றார்.

இப்பல்கலைக்கழக வேந்தர் என்.எம். வீரையன் கூறுகையில், கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்பது எங்கள் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்புகளை வழங்குவதோடு, மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களுடன் நீண்டகால கூட்டாண்மைகளை உருவாக்குவதும் ஆகும். என்றார்.

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் ரம்யா தீபக் கூறுகையில், வெவ்வேறு கலாச்சாரங்கள், கல்விச் சூழல்கள் மற்றும் வழிமுறைகளைப் புரிந்துகொள்வது மற்றும் அனுபவிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி மாணவர்களை மிகவும் தகவமைக்கக்கூடிய மற்றும் உலகளாவிய எண்ணம் கொண்ட நிபுணர்களாக உருவாக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img