fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் 136வது தொடர் ஓட்டம்

ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் 136வது தொடர் ஓட்டம்

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி 161-வது ஆண்டையொட்டி, 136-வது தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது.

ஸ்டேன்ஸ் சகோதரப் பள்ளிகளான ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ. பள்ளி, ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்கள் இத்தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர்.


சி2 காவல்நிலையம் அருகில் கோவை மாநகர் காவல் துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு), சந்தீஷ் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பள்ளித் தலைவர் மெர்சி ஓமன், நிர்வாகக் குழு உறுப்பினர் சுஜித்ரா ராமச்சந்திரன், முதல்வர் செலின் வினோதினி, ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் (பொ) ஜெனட் ஜெயப்பிரகாஷ், ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர் ஐலின் ஜித்ரோ, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி துணை முதல்வர் வ.திவாகரன், பிரியாசீன், உதவித் தலைமை ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.


பள்ளி மைதானத்தில் போட்டி நிறைவடைந்தது. ஆண்கள் பிரிவில் முதலிடத்தை மாணவர் ஆதித்யா மூன்றாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டார்.
வென்ற மாணவர்களுக்கு கோப் பைகள், சான்றுகள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் பிரிவில் ஸ்டேன்ஸ் ஆ.இ.பள்ளி ஆதித்யா, ஜெரால்டு, ஆலன் ஸ்டீவ், ஸ்டேன்ஸ் ஐசிஎஸ்இ பள்ளி போபி அஜய், ஜீவன், குருஸான், ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி கிரிஸ் ஆல்பிரடு, விஷ்வா, ஹரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் வென்றனர்.

மாணவிகள் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆ.இ.மேல்நிலைப்பள்ளி பிரதுஷா, மேகா, ஆஷிதா, ஸ்டேன்ஸ் ஐசிஎஸ்இ பள்ளி வசுதா பிரியா, திவா, அகாதா ரமேஷ், ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி கிரேஸ் ஏஞ்சல், ஸ்ரேயா ஜோஸ்வின், இலக்கியா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் வென்றனர்.

தொடர் ஓட்டத்தை உடற்கல்வித் துறைத் தலைவர் கிளேட்டன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கிணைந்து நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img