தமிழ்நாடு எறிபந்து கழகம் மற்றும் திருவண்ணாமலை எறிபந்து கழகம் இணைந்து நடத்திய 18வது மிக இளை யோருக்கான மாநில எறிபந்து போட்டி திருவண்ணாமலையில் கடந்த 7ம் தேதி தொடங்க நேற்று (9ம் தேதி) வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் பிரிவில் 32 மாவட்ட அணிகளும் மாணவிகள் பிரிவில் 26 மாவட்ட அணிகளும் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட மாணவர்கள் அணி ஐந்து லீக் போட்டிகளில் வென்று காலிறுதியில் காஞ்சிபுரம் அணியை 15-02, 15-06 என்ற புள்ளிகள் கணக்கிலும், அரையிறுதியில் திருவள்ளூர் அணியை 15-09 15-06 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
பரபரப்பான இறுதிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியுடன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 13-15, 15-02, 15-08 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 18வது மாநில மிக இளையோருக்கான தங்கப்பதக்கத்துடன் கூடிய சாம்பியன் பட்டத்தை கோவை மாவட்ட அணி வென்றது.