கே.பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச் சிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு, உற்சவம்’23 விழா நடைபெற்றது. பி.காம். மூன்றாமாண்டு மாணவி டி.டி.அபிராமி வரவேற்றார்.
கே பி ஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே. பி.ராமசாமி தலைமை தாங்கி பேசினார்.முதல்வர் முனைவர் பி.கீதா ஆண்டறிக்கை வாசித்தார். முதன்மை நிர்வாகி முனைவர் எஸ். பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.
2022-2023-ம் ஆண்டிற் கான சிறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. மலரினை வெளியிட்ட, நிகழ்வின் சிறப்பு விருந்தினர் அவினாசிலிங்கம் பல் கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.குழந்தைவேலு, மாணவர்கள் தம் வாழ்க்கையில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமூக அக்கறை முதலியவற்றைக் கைகொள்ள வேண்டும்.
உடலையும், மனதையும் பேண வேண்டும்.வுரை வழங்கினார். பழமையான மரபுகளை அறிந்து, அதன்வழியில் கலாச் சாரத்தோடு வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர் இந்தியா – கேம்பஸ் லீட், ஜோசுவா டேவிட் எம் டி. பேசும்போது, மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்வியலில் மேம்பட்டு, தொழில் நிறுவனங்களில் திறம்பட செயலாற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கி னார். தன் தனித்திறனை அறிந்து பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
உற்சவம்’23 நிகழ்வில், சிறந்த பேராசிரியருக்கான விருதினை பி.காம் -பி.ஏ துறையைச் சார்ந்த முனைவர் எஸ்,ஸ்ரீவித் யாவும், சிறந்த வகுப்பாசி ரியருக்கான விருதினை பி.காம். துறையைச் சார்ந்த முனைவர் ஆர்.பிரேமாவும் பெற்றனர். சிறந்த துறைக்கான விருதினை, பி.காம் பி.ஏ. பெற்றது.
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கான விருதினை, பி.காம் பி.ஏ மூன்றாமாண்டு எம்.விக்னேஷ், பி.காம் பி.ஏ சி.ஏ. டி.காயத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கல்லூரியில் பயிலும் காலத்திலேயே கல்வியில் சிறந்து, வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்குப் பணி நியமன ஆணையுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பி.காம். மூன்றாமாண்டு மாணவன் ஜி.லோ கநித்தீஷ்வரன் நன்றி கூறினார்.



