முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், சுசுகி மோட்டார் கார்ப்பரே ஷனின் (SMC) துணை நிறுவனமாகவும் திகழும் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL), கோவையில் அதன் நான்காவது பிரீமியம் டீலர் ஷிப்பைத் துவக்கியுள்ளது. இப்புதிய பிரீமியம் விற்பனை நிலையத்தை அதர்வா சுசுகி இயக்கும்.
தற்போது, இந்தியா முழுவதும் சுமார் 518 சுசுகி பிரீமியம் டீலர்ஷிப்கள் உள்ளன.
புதிய பிரீமியம் டீலர்ஷிப் கோவை பீளமேடு, அவிநாசி சாலையில் அமைந்துள்ளது.
இந்த புதிய டீலர்ஷிப் தவிர, சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் ஏற்கனவே கோவையில், சத்தி சாலை, மேட்டுப் பாளையம் சாலை, திருச்சி சாலையில் 3 டீலர்ஷிப் களைக் கொண்டுள்ளது.
திறப்பு விழாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கெனிச்சி உமேடா பேசியதாவது:
சுசுகி இரு சக்கர வாகனங்களை வாடிக்கை யாளர்களுக்கு அதிகளவில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியில், கோவையில் புதிய பிரீமியம் டீலர்ஷிப்பைத் திறப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நகரத்தில் எங்கள் சில்லறை விற்பனை அனுபவத்தை விரிவ £க்குவது மட்டுமல்லாமல், தடையற்ற அனுபவத்தை வழங்குவதையும் நோக் கமாகக் கொண்டுள்ளோம்.
கோவையில் சுசுகி இரு சக்கர வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சிறந்த சேவை மற்றும் இணையற்ற வாங்குதல் அனுபவத்தை வழங்க புதிய டீலர்ஷிப்பைத் திறக்க முடிவு செய்தோம்.
இந்த டீலர்ஷிப் உள்நாட்டு சுசுகி இரு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனம் வழங்கும் சமீபத்திய பாகங்கள், அணிகலன்கள் மற்றும் வணிகப் பொருட்களை வழங்கும்.



