fbpx
Homeபிற செய்திகள்தத்ரூபமாக பரதநாட்டியம் ஆடி அசத்திய கோவை பள்ளி மாணவி ஷம்யுக்தா

தத்ரூபமாக பரதநாட்டியம் ஆடி அசத்திய கோவை பள்ளி மாணவி ஷம்யுக்தா

கோவை உடையாம் பாளையம் அண்ணமார் விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆர்.சி.ஷம்யுக்தா குழு வினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

கோவை உடையாம் பாளையம் பகுதியில் உள்ள அண்ணமார் விஸ் வநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா மே 24 ந்தேதி நடைபெற்று வருகிறது. கடந்த 21 ந்தேதி நண்மங்கல இசை, மற்றும் திருவிளக்கு வழி பாட்டுடன் துவங்கிய விழாவில், ஒவ்வொரு நாளும் பூஜைகளுடன், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக யுக்தா பைன் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.சி.ஷம்யுக்தா தலைமையிலான நடன குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேம்போர்டு சர்வதேச பள்ளி மாண வியான ஆர்.சி. ஷம் யுக்தாவின் தத்ரூபமான முகபாவனையுடன் ஆடிய பரதநாட்டியம் கூடி யிருப்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

நாட்டியத்தை கண்ட பார்வையாளர்கள் ஷம்யுக்தா மற்றும் அவரது குழுவினரை கவுன்சிலர் கீதா சேரலாதன் உட்பட வெகுவாக பாராட்டினர். ஆர்.சி.ஷம் யுக்தாவுடன் இணைந்து, ஆர்.எஸ்.கரிஷ்மா, நந்திதா சத்தி குமார், ஓவியா ஸ்ரீ ஜோதிமணி ஆகியோரும் இணைந்து ஆடினர்.

படிக்க வேண்டும்

spot_img